கரூர் : கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று சோதனை செய்தபோது இனுங்கூர் வ.உ.சி. நகரை சேர்ந்த கனகா (29), பெருமாள் (39), அன்புகுமார் (46), ஆகியோர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.