செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம் ஜி- 1 மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுராந்தகம் பஜாரில் Darling Electronic Shop – ல் கடந்த (15/7/2023), ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1 மணி முதல் 3:00 மணி அளவில் கடையின் இரும்பு ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 13 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. அன்றைய தினமே மதுராந்தகம் காவல்நிலைய குற்ற எண் 406/ 2023,U/S 457,380 IPC யில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாய் பிரனீத் ஐ.பி.எஸ், அவர்களின் உத்தரவுப்படி மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சிவசக்தி டி.பி.எஸ், அவர்கள் மேற்பார்வையில் மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. தர்மலிங்கம் அவர்கள், தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட சைபர் செல் பிரிவு உதவி ஆய்வாளர் திரு. தனசேகரன் தனிப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மோகன்ராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குப்புசாமி, மற்றும் இளங்கோவன், தலைமை காவலர்கள் கர்ணன், முத்துக்குமார், மற்றும் உமாபிரபு, தனிப்பிரிவு காவலர் கவியரசன், காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், பெண் காவலர் ஐஸ்வர்யா, சைபர் செல் பிரிவு காவலர்கள் முரளி, கலைவாணன் அவர்கள், உதவியுடன் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த மோகன்ராஜ் சென்னை கொடுங்கையூர் எம் ஜி ஆர் நகரை சேர்ந்த வினோத் கொடுங்கையூர் சேர்ந்த கணேசன் என்ற குற்றவாளிகளிடம் இருந்து விலை உயர்ந்த உயர்ரக செல்ஃபோன்களை கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குற்றம் நடைபெற்ற 72 மணி நேரத்தில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை கைப்பற்றியதை வெகுவாக பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்