மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில், கடன் பெற்று தருவதாக கூறி போலி நிதி நிறுவனம் மூலம் பல தவணைகளில் பணத்தை வசூலித்து மோசடி செய்தவர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. என்.எஸ்.நிஷா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திரு. இளையராஜா, தலைமையில் தனிப்படை அமைத்து 100 -க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த 3 பேரையும் கைது செய்து லேப்டாப், செல்போன், சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திறம்பட செயலாற்றிய மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர், படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, IPS., அவர்கள் பாராட்டினார்கள்.