சேலம்: சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அல்லாத சிலர் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு அவர்கள் அனைவரையும் விசாரணை செய்ய வேண்டுமென தெரிவித்து சார்பதிவாளர் அலுவலக கதவை பூட்டி விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து போலீசார் அலுவலகத்தில் சோதனையிட்டபோது அங்கு கணக்கில் வராத பணம் ஐந்து லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது மேலும் சோதனை போது இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் பணம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.