தேனி : தேனி கூடலூர் பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் எந்திர தராசு இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் (56) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.