திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த பரமேஸ்வரி (36), என்ற பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரிடம் நடத்திய சோதனையில் உடலில் மறைத்து ரூ.7.74 லட்சம் மதிப்பிலான 143 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.