ஈரோடு: ஈரோடு மாவட்டம்,அந்தியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில், கடந்த 3 மாதங்களாக சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக, மொத்தம் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்நாடக மதுபாட்டில்களும்,43 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்நாடக மதுபாட்டில்கள், கோபி கலால் வட்டாட்சியர் திருமதி.ஷீலா மற்றும் அந்தியூர் காவல் ஆய்வாளர் திரு.செந்தில் ஆகியோர் முன்னிலையில், அந்தியூர் பெரிய ஏரியில் கொட்டி, ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு மதுபாட்டில்கள் அனைத்தும் இன்று காலை அழிக்கப்பட்டது.