திண்டுக்கல்: பழனி போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து மதுபாட்டில்கள் களையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை நேற்று போலீசார் பழனி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது குற்றவியல் நீதித்துறை நீதிபதி திரு.ரகுபதிராஜா மதுபானங்களை அழிக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து நீதிபதி முன்னிலையில் நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் குழிதோண்டி மதுபானங்களை கீழே கொட்டி அழிக்கப்பட்டது..
தாலுகா காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.இசக்கிராஜா தலைமையிலான போலீசார் மதுபானங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.