திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. பேட்டை தாலுக்காவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையர் ஆக பணியாற்றி வருபவர் ஸ்ரீதேவி 30. அவரை பாலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி
திருவேங்கடம் என்பவரின் மனைவி புவனேஸ்வரி என்பவர் அவருக்கு சொந்தமான தாய்வீட்டு வீட்டுமனை நில அளவீடு செய்ய நில அளவையர் ஸ்ரீதேவியை சில தினங்களுக்கு முன்பு அணுகியுள்ளார்.,
இருப்பினும் பலமுறை அலைக்கழித்த நிலையில் இறுதியில் ரூபாய் 3.500 வழங்கினால் சர்வே செய்வேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.,
லஞ்சம் வழங்க விருப்பமில்லாத புவனேஷ்வரி திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் செய்துள்ளார்.,
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழங்கிய ரசாயணம் தடவிய பணத்தை இன்று மாலை பாலாபுரத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நில அளவையர் ஸ்ரீதேவியிடம் வாங்கியபோது.
அதே பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கலைச்செல்வன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் கையும் களவுமாக லஞ்சம் பெற்ற நில அளவையர் ஸ்ரீதேவியை பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் ஆறு மணி நேரம் விசாரணைக்கு பின்பு நீதிபதி முன்பு ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.,
நில அளவீடு செய்ய ரூ. 3.500 ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் சர்வேயரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆர்.கே.பேட்டை தாலுகா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை















