இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை நிலை காவலராக பணிபுரிந்து வந்த பாரதிதாசன் என்பவர் உடல்நல குறைவால் மரணமடைந்ததையடுத்து காவலரின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 2010 பேட்ஜ் காவலர்கள் ஒன்றிணைந்து திரட்டப்பட்ட நிதி உதவி தொகை ரூபாய் 15,21,210/-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் பாரதிதாசன் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார்.