திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த காவல் ஆய்வாளர் திரு.சோனியா தலைமையிலான போலீசார் தேசூர் சாலையில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் காரினுல் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் வந்தவாசி காந்தி சாலை சேர்ந்த தினேஷ் குமார்(32),சென்னை கோவளத்தை சேர்ந்த முகமது உசேன்(32) என்பதும் இவர்கள் இருவரும் புகையிலை பொருட்களை கடைகளுக்கு விற்பனைக்கு காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து புகையிலை பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.