சென்னை : சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் சாலையில், பெடரல் வங்கிக்கு சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (பெட் கோல்டு லோன்) உள்ளது. இங்கு பட்ட பகலில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை நேற்று மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். திருடி சென்ற கொள்ளையரை பிடிக்கும் காவல்துறையினருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என திரு.டி.ஜி.பி சைலேந்திர பாபு, இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, டி.ஜி.பி சைலேந்திர பாபு, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது கொள்ளையர் பற்றிய தகவல்களை துப்பு கொடுத்தால் ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் வழங்குபவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொது மக்கள் தகவல் தெரிவிக்க காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-2844 7703/ 044-234502324 தொடர்பு கொள்ளலாம் என காவல்,துறை அறிவித்துள்ளது.