திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் பரணி 46. இவரிடம் திருவண்ணாமலை வஉசி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் 53 என்பவர் நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் ரூ.2 கோடி மதிப்புள்ள வலம்புரிச்சங்கு இருப்பதாகவும்,அதனை வைத்திருப்பவர்கள் கோடீஸ்வரர்களாகி விடுவார்கள் என்றும், இதை விற்று தந்தால் பல லட்ச ரூபாய் இடைத்தரகர்களாக கமிஷன் தருகிறோம் என்றும் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பரணி இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.பின்னர் பரணி அங்கு சென்றபோது கோவிந்தராஜுடன் காரில் ஒரு கும்பல் வந்துள்ளது.இதையடுத்து அங்கு மறைந்திருந்த போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரணியிடம் கடைகளில் விற்கப்படும் ஒரு சங்கை காண்பித்து வலம்புரி சங்கு என்று கூறி மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. கோவிந்தராஜ் 53, சதீஷ் 21உமாசங்கர் 38 அரசு 50 ராம்குமார் 32, அஸ்வத்தாமன் 28, நாகராஜ் 41 ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஏழு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய கடலூரை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.