மதுரை : மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது (01.03.2021)-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கருப்பையா அவர்கள், மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. R. சிவபிரசாத், I.P.S. அவர்கள், உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் சம்பந்தமான புகார்களில் கடந்த இரு மாதங்களில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் ரூ.16,65,200/-(பதினாறு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து இரு நுாறு) மதிப்புள்ள 100 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் இன்று (11.10.2023)-ந் தேதி உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.விஜயராஜ்