தேனி : தேனி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு (Block Co-ordinator) முற்றிலும் தற்காலிகமாக மாதம் ரூ.12000/- தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் கணினியில் 3 மாத கால சான்றிதழ் (MS Office) கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் 01.10.2022 அன்று 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை திட்ட இயக்குநர்/ இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த அலுவலர் வளாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தரைதளம் (அலுவலக தொலைபேசி எண்: 04546-255203) தேனி மாவட்டம் என்ற முகவரியில் நேரில் வழங்கிட வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் (25.01.2023) அன்று மாலை 05:30 மணிக்குள்,இதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும், இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் பணி நாட்களில் மாலை 06 மணிக்குள் விபரங்களை பெற்று பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளீதரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்தி தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில்,செய்தி வெளியீட்டு எண்:22-ன் கீழ், ஜன:07 நாளது தேதியின் படி அறிவித்துள்ளது.