திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் நிலையத்தில் 3 நிலைகளில் மொத்தம் 1830 மெ.வா மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில் அனல் மின் நிலைய 1வது நிலையின் 3வது அலகில் தொழில்நுட்ப கோளாறால் 210 மெ.வா, 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் கசிவால் 600 மெ.வா என 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. மில்டன்