இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் நதியா (36), இவரிடம் திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (20) என்பவர் 7½ பவுன் தங்கத்தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். நதியா தொண்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருடிச் சென்ற 7½ பவுன் தங்கச்செயினை கைப்பற்றினர். வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.