மதுரை: திருமங்கலம் கப்பலூர் மேல தெருவை சேர்ந்தவர் மணி (65). இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டது இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால், மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில், மாட்டுத்தாவணி அருகே மேலூர் மெயின் ரோட்டில் தனியார் பஸ் கம்பெனி முன்பாக விஷம்குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் மகாலிங்கம் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் மணியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி