திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும். அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் விழா வி. ஆர் பகவான்
தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 28ஆம் தேதி வரை 13 நாட்கள் விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்களும் சிம்ம வாகனம் சூரிய பிரபைபூத வாகனம் நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிவபெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார் முக்கிய விழாவாக திருத்தேராட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. 24 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் 28ஆம் தேதி 108 சங்காபிஷேகத்துடன் நிறைவு விழா
நடைபெறுகிறது.
கோவில் கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். கொடியேற்று விழா சிவாச்சாரியார் விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்றது. கோவில் அறங்காவலர் மருத்துவர் அருண் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். கொடியேற்று விழாவில் விழா குழுவினர் மருத்துவர்
எம் .விஜயராவ் சுப்பிரமணி வெங்கடேசன் பட்டாபிராமன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத் தலைவர் அலெக்சாண்டர் கோதண்டம் சங்கர் மாரி சுப்பிரமணி அறநிலைத்துறை கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு