திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கல்வி மாவட்டம், மீஞ்சூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மீஞ்சூர் ஒன்றிய ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் தினவிழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள்ச.செ.முகமது அனிசுல் ஹக், வே.வினோத் குமார்,ப.உமா சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.மீஞ்சூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எம்.செந்தில் ஆனந்த், மீஞ்சூர் டி.வி.எஸ்.ரெட்டி மே.நி.பள்ளி தலைமை ஆசிரியர் டி. இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.பொன்னேரி மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி) டி.சுரேஷ்குமார், சென்னை பன்னாட்டு அலையன்ஸ் சங்க தலைவர்சி.பாலசந்திரன் ஆகியோர்ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
தலைமை ஆசிரியர்கள் ஆர்.மாலா, ஜெ.மணிமொழி, கி.ஜெயராஜ், அன்புமலர், டி.எஸ்.பிரசன்னவதனா, எம்.ஆர்.கிருஷ்ணா, எம்.எஸ்.ஷாகிரா பானு, ரெஜினால்டு ஜோஸ்.இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வன்னிபாக்கம் ஆசிரியர் எம்.கே.மகேந்திரன் நன்றியுரையாற்றினார். புதுப்பேடு ஆசிரியர் எஸ்.ஷோபா நிகழ்ச்சி தொகுத்தார். தலைமை ஆசிரியர்கள் ஜெ.பாண்டியராஜன், கி.ஜெயராஜ், எம்.முரளிதாஸ், வ.லோ,அரசுஒ.எம்.பாபு, ஜெ.ஆனந்த் சாந்தகுமார், ஞா.அகஸ்டின் துரை சிங்,டி. இராஜரத்னகுமார், ஔ.மகராஜன் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு