திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூரைச் சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 35). தப்பாட்ட கலைஞர் அவருக்கு திருமணம் ஆகி 3 ஆண் குழந்தைகள் உள்ளது. இன்று மாலை முதலில் இடி மின்னலுடன் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வந்தது மழை பெய்து கொண்டிருந்த போது வேல்முருகன் தனது வீட்டு அருகில் தனது மாட்டை கட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் காவல் துறையினர் வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் புகாரின் பேரில் நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி