மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் அருகில் உள்ள, பெரிய ஆலங்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவர், இங்குள்ள கிராம பொது குளியல் தொட்டிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அருகில் இருந்த மின் மோட்டாரை இயக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி விசப்பட்ட பாலமுருகன் சிகிச்சைக்கு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, இறந்துவிட்டதாக கூறினர். மின் மோட்டரில், மின்சாரம் பாய்ந்து அதனால் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே இந்த உயிர்பலிக்கு காரணம் என, இப்பகுதியினர் தெரிவித்தனர்.