திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி மூன்றாவது வார்டு பகுதியில் அமைந்துள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகமான சாய்வு தளத்துடன் கூடிய கழிப்பிடம் திறப்பு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா முன்னிலை வகித்தார். பள்ளியின் மேலாண்மை குழு பிரதிநிதி ஜெ.குரு சாலமோன் அனைவரையும் வரவேற்றார். 5ஆம் வகுப்பு படிக்கின்ற சந்தோஷ் என்கிற மாணவன் மாற்றுத்திறனாளியான இவர் ரிப்பன் வெட்டி திறந்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பார்கள் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர், 5 வது வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி தன்ராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமதி ராஜேஷ், சமூக ஆர்வலர்கள் பாவலர் மு.தனராசு, சீ.அன்பரசு , தங்கமணி வெங்கடேசன் ராம், டேனியல் ஆசிரிய பெருமக்கள் ஊர் பொதுமக்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு