திருச்சி : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக திரு.கார்த்திகேயன் அவர்கள் இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவும் அதற்கு முன்பு திருப்பூர் மாநகர காவல் துறை ஆணையராகவும் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளார் மேலும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவராகவும் 2016 ஆம் ஆண்டில் பணியாற்றியுள்ளார். மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களிலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கேற்ப போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திடம் 2023 ஆம் ஆண்டில் அதிக முக்கியத்துவம் முக்கியத்துவம் தரப்படும் என்று கஞ்சா குட்கா மற்றும் இதர போதை பொருட்களை கடத்துதல் பருகுதல் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளின் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளார் மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி உள்ளார் பொதுமக்கள் காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையான விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காணும் வரை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் மணல் கடத்தல் சட்டவிரோதமான செயல்கள் மற்றும் சாராய விற்பனை லாட்டரி விற்பனை போன்ற சமூக விரோதி செயல்களை ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட பிரிவுகளுக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.
இணையதளம் மோசடி குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார் சட்டவிரோதம் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் குற்ற செயல்கள் ஈடுபடும் ரௌடிகள் மற்றும் சமூகவிரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு குன்றத்தடுப்பு சட்டத்திற்கு செயல் அடைக்கப்படுவர் என்ற எச்சரித்துள்ளார் சாலை விபத்துகளை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் வேலை நாட்களில் தினமும் பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்