பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ்குமார் இ.கா.ப, அவர்களின் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவண சுந்தர் இ.கா.ப, அவர்களின் அறிவுறித்தலின்படியும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.மணி அவர்கள் வழிகாட்டுதல்படியும், சைபர் கிரைம் (பொ) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன், அவர்களின் மேற்பார்வையில், இன்று 12/12/2022 ஆம் தேதி பெரம்பலூர் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.வளவன் அவர்களின் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலெட்சுமி சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.மனோஜ், செல்வி.A.சிவமீனா (தொழில்நுட்பம்) ஆகியோர்கள் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.வளவன் அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே பேசுகையில் மாணவர்களாகிய நாம் இந்த சமூகத்தில் மத நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் பழக வேண்டும் என்றும் எதிர்காலத்தில் நாம் என்ன ஆகவேண்டும் என்பதை இப்பொழுதே திட்டமிட்டு அதன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறித்தினார்.
அதன் பின்னர் இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலெட்சுமி அவர்கள் மாணவிகளிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பெண் குழந்தை திருமணங்கள் தடுப்பது குறித்தும்
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்கள் பேசியதாவது இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது பற்றியும், ஏடிஎம் கார்டு மற்றும் ஒடிபி எண் பகிரகூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, E-Bike dealership, கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், எண்ம நாணயம் (Cryptocurrency) மோசடி, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது குறித்தும், ஆன்லைன் விளையாட்டு குறித்தும், தேவையில்லாத அப்ளிகேசன் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், மேலும் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.