பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சந்தோஷ்குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சரவண சுந்தர் இ.கா.ப அவர்களின் அறிவுரையின்படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் மேற்பார்வையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.M.S.M.வளவன் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பெரம்பலூர் TELC நடுநிலைப் பள்ளி, துறைமங்கலம் பகுதியில் மாணவ மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாணவ மாணவிகளிடம் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் சமூகத்தில் உள்ள அனைவரும் சமம் என்றும், ஒருவர் ஒருவரிடம் பேசும் போது சகோதர சகோதரிகள் உணர்வோடு பேச வேண்டும், எதிர் காலத்தில் என்னஆக வேண்டும் என்பதை திட்டமிட்டு அதற்கான சிந்தனை மற்றும் அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
உங்கள் வருங்கால வாழ்க்கை உங்கள் கையில் தான் உள்ளது. மேலும் வருங்காலத்தை நீங்களே உருவாக்குங்கள் என்று அவர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைப்பெற்றால் அதனை உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.