தர்மபுரி: இன்று (05.02.2024) தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.N.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் “மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்” (STATE POLICE CADETS (SPC) என்ற திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் 60 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்த 60 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் திட்டத்தினை செயல்படுத்துவது சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆலோசனை வழங்கினார். மேலும் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் தலா ரூ. 50,000 ரூபாய் என அறுபது அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும் மேற்கண்ட தொகைக்கான காசோலைகளை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.இளங்கோவன் அவர்கள் மற்றும் தனி பிரிவு காவல் ஆய்வாளர் திரு.அன்பழகன் மற்றும் இத்திட்டத்தின் பொறுப்பு காவல் அலுவலர் திருமதி.கே.புவனேஸ்வரி, காவல் ஆய்வாளர், (குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு) ஆகியோர் கலந்து கொண்டனர்.