தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகையினை காவலர் சேமநல நிதியிலிருந்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.சோ. மகேஸ்வரன்., B. COM, BL அவர்கள் வழங்கினார். இதில் தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் 20 காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு மொத்தம் ரூ.1,23,000/- கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது. இதில் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை காசோலையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் பாரதி, அலுவலக கண்காணிப்பாளர்கள் பிரேமலதா மற்றும் கமலி ஆகியோர் உடனிருந்தனர்.