பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளாதேவி அவர்களின், உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மருதமுத்து மற்றும் முதன்மைக் காவலர் திருமதி.சுமா One step Center உறுப்பினர் செல்வி.மேகலா ஆகியோர்கள் (31.07.2023) -ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், Women Help Desk 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும்.
இலவச உதவி எண் 14417 குறித்தும் முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 மற்றும் போக்சோ சட்டம் 2012 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.