கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் முகுந்தன் 20. இவர் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த கமல் 36. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மகேஷ்குமார் 37. ஆகிய 2 பேரும் முகுந்தனின் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடினர். இதுகுறித்து முகுந்தன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, கமல், மகேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.