மதுரை: ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டுகாலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). இவர் மகபூப் பாளையம் அன்சாரி நகர் ஏழாவது தெருவில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது முதல் மாடிக்கு சென்ற போது கால் தவறி கீழே விழுந்து பலமாக அடிபட்டது. இதில் சம்பவ இடத்திலேயே பால்பாண்டி பலியானார். இது குறித்து அவருடைய மகன் மாரிமுத்து எஸ். எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி