குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய இன்று (14.11.2021) தமிழக காவல் துறை இயக்குநர் திரு.சைலேந்திர பாபு IPS அவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பூதப்பாண்டி, இரணியல், குளச்சல், முஞ்சிறை, நித்திரவிளை, அஞ்சுகிராமம்,சுசீந்திரம், திருப்பதிசாரம்,தோவாளை என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
மேலும் மாவட்டம் முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் குமரி மாவட்ட காவலர்களை சந்தித்து மீட்பு பணிகளை குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றார்.