திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே தருமத்துப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக பழனி மதுவிலக்குப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு.ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது முத்துசாமி மகன் அன்னராஜா என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் 200மி.லி கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலில் சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனடியாக அன்னராஜாவை பழனி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் வைத்திருந்த 50 பாட்டில் சாராயம் மற்றும் சாராயம் விற்பனை செய்ய வைத்து இருந்த உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சாராயம் விற்பனை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா