திருவண்ணாமலை : கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் போளூர் உட்கோட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் உள்ள தும்பக்காடு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2 நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.