மதுரை : மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன் இவர், அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரிடம், கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நாராயணன் பீரோவில் வைத்திருந்த 32 சவரன் தங்க செயின்கள் சவரன் மதிப்புடைய தங்க பொருட்களை திருடு போயுள்ளது. இதனைத்
தொடர்ந்து, வீட்டின் இருந்த CCTV காட்சிகளை சோதனை செய்த ஓட்டுநர் ஜெயராமன் நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நாரயணன் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர், ஓட்டுநர் ஜெயராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி