திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது வட்டார தலைமை மருத்துவரிடம் மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் சுகாதாரம் மருத்துவர்கள் பற்றாக்குறை செவிலியர்கள் பற்றாக்குறை தங்கும் அறைகள் மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவைகள் சரியான முறையில் உள்ளதா என மருத்துவரிடம் சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். அருகில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், வட்டார தலைமை மருத்துவர் மகேந்திரவர்மன் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு