இராமநாதபுரம்: பரமக்குடி தெளிச்சாத்த நல்லூரைச் சார்ந்த பெயிண்டர் திரு.கண்ணன் அவர்கள் கடந்த (13.03.2024) அன்று அபிராமம் அருகில் நடந்த ஒரு விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் தமிழ்நாடு HMS உழைப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதையும், அவர்கள் ஒரு ரூபாய் கூட சேவைக்கட்டணமின்றி அரசின் நலத்திட உதவிகளைப் பெற விண்ணப்பித்துத் தருவதனையும் சட்டக்களம் தினசரி நாளிதழ் மூலம் அறிந்த நியமனதாரரான அவரது மனைவி சத்யா (03.07.2024) தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் விபத்து மரண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2,05,000 பெற விண்ணப்பித்துள்ளார். தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய அட்டை & உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும் தொடர்பு கொள்ளவும். மாவட்டத் தலைமை அலுவலகம்,தமிழ்நாடு HMS உழைப்பாளர் சங்கம்,பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் எதிரில், வ.உ.சி மஹால் அருகில்,காட்டுப்பரமக்குடி,இராமநாதபுரம் மாவட்டம் 9842463437 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி