திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனில் எஸ்பி ஆய்வு செய்து மரக்கன்றுகளை நடுவதற்கு அறிவுரை வழங்கி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய எஸ்.பி.யாக திரு.சீனிவாசன் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் பொறுப்பேற்றதில் இருந்து தினமும் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனாக சென்று அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்.மேலும் தேவையற்ற வாகனங்களை ஏலம் விடுமாறு அறிவுரை வழங்குகிறார்.
பின்பு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதற்கும் .அங்கு மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கும் விழிப்புணர்வு செய்கிறார்.
இன்னிலையில் திண்டுக்கல் அம்பாத்துரை காவல் நிலையத்தை எஸ்பி.திரு.ஸ்ரீனிவாசன் ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் விபரங்களை கேட்டறிந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி அறிவுரை வழங்கினார்.