ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நரசாபுரம் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் வந்தவரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் ஆறு ஜோடி மயில்களின் கால்கள் இருப்பது தெரியவந்தது.