திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசியை சேர்ந்தவர் உஷால் 39,இவரது மனைவி சுமதி 36.இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.ஆனால் குழந்தை இல்லை. இதனால் தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 29-ந்தேதி இரவு வழக்கம்போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதில் மனம் வருத்தம் அடைந்த சுமதி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் சுமதியை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இதுகுறித்து சுமதியின் தாய் அளித்த புகாரின் பேரில் மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக உஷால் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.