திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சுள்ளெரும்பு நால்ரோடு சேர்ந்தவர் முருகன் 45.இவரது மனைவி பூங்கொடி 40 இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முருகன் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பூங்கொடியின் சகோதரியின் கணவரான பொன்மாந்துறையை சேர்ந்த பெருமாள் என்பவருடன் பூங்கொடி கள்ளத்தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. முருகன் பலமுறை கண்டித்தும் அதனை கேட்காமல் பூங்கொடி இருந்துள்ளார். பூங்கொடிக்கும் முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோபமடைந்த முருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பூங்கொடியை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பூங்கொடியை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரிவாளால் வெட்டிய கணவனை தேடி வருகின்றார்கள்.