கோவை: கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி செரினா (வயது 28) இவர்கள் இருவரும் சில நாட்களாக பிரிந்து வாழ்கிறார்கள்.
செரினா குனியமுத்தூர் லவ்லி கார்டனில் உள்ள தன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது பழைய காதலனுடன் செல்போனில் பேசி வந்தாராம். இதை அறிந்த அப்பாஸ் தனது தம்பி அக்பரை அழைத்துக் கொண்டு செரினா வீட்டுக்கு சென்றார்
.அங்கு அவரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ச இருவரும் சேர்ந்து செரினா வை கத்தியால் குத்தினார்கள். இதில் செரினா படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் அப்பாசை இன்று கைது செய்தனர். அவரது தம்பி அக்பரை தேடிவருகிறார்கள். அவர்கள் மீது கொலை முயற்சி ,பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தாக்குதல், உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.