மதுரை : பாண்டியன் நகர் ,மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மணி (53), இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனம் உடைந்து இருந்த மணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையின் சாவு குறித்து மகன் தினேஷ் குமார் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி