கரூர் : கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்த வேல்முருகன் (29), பிரேம்குமார் (25), புகழேந்தி (40), மாரிமுத்து (46) மற்றும் மற்றொரு மாரிமுத்து (41), முத்துப்பாண்டி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.