நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டார் அவரது உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்தியது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த 167 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.