திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி நாகராஜன் மேற்பார்வையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு.சத்தியசீலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் தலைமை காவலர்கள் திரு. ரஞ்சித்குமார், திரு.சிவப்பிரகாசம், திரு.தர்மராஜ், திரு.கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பல இடங்களில் ஆய்வு நடத்தினர். ஏ.எம்.சி ரோடு பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாசிலாமணி புரத்தை சேர்ந்த செந்தில்வேல்முருகன் 56 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 384 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள். மதுவிலக்கு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.