தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுவிலக்கு போலீசார் தர்மபுரி அரூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்த நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 55 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.