திருவண்ணாமலை: டிஎஸ்பி. பி.தங்கராமன்,தெள்ளார் காவல் ஆய்வாளர் சோனியா மற்றும் போலீசார் அந்த பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வாகனத்தில் தண்ணீர் பாட்டில்களுக்கு அடியில் பெட்டி பெட்டியாக கர்நாடகா மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த மணிவண்ணன்(32),பிரசாத்(42), நல்லூரை சேர்ந்த சந்தோஷ்(23) ஆகியோர் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை வாங்கி வந்து கூடுதல் விற்பனைக்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவர்கள் மூவரையும் கைது செய்து, 675 மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்