கணவர் கண்டித்ததால் மனைவி தற்கொலை
மதுரை : மதுரை செல்லூர் 50 அடி ரோடு மேற்கு தெருவை சேர்ந்தவர்பரமன் மனைவி வைஷ்ணவி (20) இவர் செல்போனில் அடிக்கடி வேறொரு நபரிடம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை கணவர் கண்டித்துள்ளார்.இதனால் மனமுடைந்த மனைவி வைஷ்னவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம்குறித்து கணவர் பரமன் செல்லூர் போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து மனைவி வைஷ்ணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபாரத்தில் நஷ்டம் வியாபாரி தற்கொலை
பழைய விளாங்குடி ஆழவாய் நகரை சேர்ந்தவர் பாலாஜி (48), இவர் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது இதனால் கடையை மூடிவிட்டார். இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய தம்பி சரவணன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காய்கறி வியாபாரி பாலாஜியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பசுமலையில் 27 ஆயிரம் பறிமுதல் 7 பேர் கைது
பசுமலை தியாகராஜர் காலனி முதல் தெருவில் பணம் வைத்து சூதாடுவதாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய ஏழு பேரை பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (63), கதிரேசன் (54), பைபாஸ் ரோடு நேரு குறுக்கு தெரு சுரேஷ்பாபு (38),ராஜபாளையம் போத்திராஜ் (57),பசுமலை ராஜா (49), ஈஸ்வரன் (57), திருநகர் கணேசன் (54), என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பணம் வைத்து விளையாடிய (52) சீட்டு கட்டுக்களையும் பணம் ரூபாய் 27 ஆயிரத்து 580 ஐயும் பறிமுதல் செய்தனர்.
அறிவாளை காட்டி பால் வியாபாரிக்கு மிரட்டல்
கோச்சடை விவேகானந்தர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மலை ராஜன் மகன் நாகராஜன் (43) அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் முனீஸ்வரன் (29), நாகராஜன் பால் வியாபாரம் செய்து வருகிறார் 5 வருடங்களுக்கு முன்பு அவரது மாடு காணாமல் போய்விட்டது. இது தொடர்பாக முனீஸ்வரனுக்கும் நாகராஜனுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று பெத்தானியாபுரம் மேட்டு தெரு அகஸ்தியர் இரண்டாவது தெருவில் சென்று கொண்டிருந்த நாகராஜனை முனீஸ்வரன் வழிமறித்தார். அவரை ஆபாசமாக பேசி அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து நாகராஜன் கரிமேடு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அவருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் முனீஸ்வரனை கைது செய்தனர்.
பெண்ணிடம் திருட்டு மற்றொரு பெண் கைது
மதுரை வடக்கு மாசி வீதி நாகுபிள்ளை தோப்புவை சேர்ந்தவர் காளியம்மாள் (57) இவர் டவுன் பயணம் பயணம் செய்தார். பஸ் நெல்பேட்டை பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவர் அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர் காளியம்மாளின் மணிப்பரிசை திருட முயன்றார். அப்போது அவரை கையும் களவுமாக காளியம்மாள் பிடித்தார். பின்னர் அவரை விளக்கத்தூண் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் பிடிபட்ட பெண்ணிடம் விசாரித்த போது அந்த பெண் திருச்சி ரயில்வே ஸ்டேஷன் கேட்தெரு ராஜேந்திரன் மனைவி சித்ராதேவி (50) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் பெண்களை குறி வைத்து திருடும் திருட்டு கும்பலைச் சேர்ந்தவரா இதுபோல் எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அந்தப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுரோட்டில் நடந்து சென்ற இளம் பெண்மீது சரமாரி தாக்குதல்
திண்டுக்கல்லை சேர்ந்தவர் மோனிஷா (24), கரூரை சேர்ந்தவர் மணிகண்டன் (28) மோனிஷா தல்லாகுளம் பகுதியில் உள்ள மால் ஒன்றில் நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன் மதுரையில் மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு மோனிசா சென்று கொண்டிருந்தார். அவர் லேடிடோக் கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரை வாலிபர் மணிகண்டன் வழிமறித்து தனது பைக்கில் ஏறும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்துவிட்டதார். ஆத்திரமடைந்த மணிகண்டன்அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை ஆபாசமாக பேசி சரமாரியாக நடு ரோட்டில்வேத்து தாக்கினார். இதில் அவருக்கு முகத்திலும் வாயிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக சென்ற வக்கீல் முத்துக்குமார் அவசர போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோனிஷாவையும் மணிகண்டனையும் தல்லாகுளம் போலீசுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். அங்கு இந்த சம்பவம் குறித்து இருவரிடமும் போலீசார் நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி