கீழமாசிவீதியில் 1லட்சத்து 94 ஆயிரம் திருட்டு!
மதுரை : வில்லாபுரத்தை சேர்ந்தவர் காமாட்சிபாண்டியன் (43), இவர் கீழமாசிவீதி கீழநாப்பாளயத்தில் வியாபாரம் செய்துவருகிறார்.சம்பவத்தன்று இவர் நிறுவனத்துக்குள்புகுந்த மர்ம நபர் அங்கு வைத்திருந்த ரூ.1லட்சத்து 94ஆயிரத்தை திருடிச்சென்றுவிட்டார்.இந்த திருட்டு குறித்து அவர் விளக்குத்தூண்போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து கடைக்குள்புகுந்து திருடிய ஆசாமியை தேடிவருகின்றனர்.
வீட்டின் கதவை உடைத்து மர்ம ஆசாமி கைவரிசை!
பெருங்குடி ஏர்போன்ட் ரோட்டை சேர்ந்தவர்குமார் (44), இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதை அறிந்த மர்ம ஆசாமி வீட்டின் பின்கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு பீரோவில் வைத்திருந்த ரூ 5ஆயிரத்தை திருடிச்சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து குமார் அவனியாபுரம் போலீசில் புகார்செய்தார் .போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவர் வீட்டில் கொள்ளையடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
மாட்டுத்தாவனி பிளாட்பாரத்தில் 2 பேர் கைது!
தென்காசி மாவட்டம் மேலகடயநல்லூரை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (26), இவர் குடும்பத்துடன் மதுரை வந்திருந்தார்.இவர் மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் நான்காவது பிளாட்பாரத்தில் காத்திருந்தபோது அவருடைய உடமைகள் மற்றும் செல்போன்களை மர்ம ஆசாமிகள் திருடிவிட்டனர். இந்த திருட்டுகுறித்து மணிகண்டன் மாட்டுத்தாவனி போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து அந்தப்பகுதி கண்காணிப்பு கேமரா மதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.பின்னர் இந்த திருட்டில் ஈடுபட்ட நரிமேடு கட்டபொம்மன் நகர் சந்திரசேகர் மகன் கணேசன் என்ற மாட்டுக்கணேசன்,கரிமேடு இளந்தோப்பு இரண்டாவதுதெரு மீண்பாண்டிமகன் பிரபு இருவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி